முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போராட்டத்தால் பாகிஸ்தானில் ரூ.55 ஆயிரம் கோடி இழப்பு!

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.10 - பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெக்ரிக் - இ - இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், பாத் கட்சி தலைவர் மதகுரு தாகிருல், கத்ரி ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்து வருகிறது.

கடந்த மாதம் 14-ஆம் தேதி முதல் இஸ்லாமாபாத் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு சுமார் 70 ஆயிரம் பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வன்முறை சம்பவங்களில் இறங்கிய வர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதில் 8 பேர் பலியாகினர். 300-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இப்போராட்டம் இன்னும் ஓயவில்லை. நேற்று 27-வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் ராஜபக்சே, சீன அதிபர் ஸி ஜின்பிங் ஆகியோர் பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை ஒத்தி வைத்துள்ளனர்.

இந்த நிலையில் எதிர்கட்சிகள் போராட்டத்தால் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள், பொருளாதார இழப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படி கடந்த வாரம் அட்டர்னி ஜெனரலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதை தொடர்ந்து பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் சல்மான் அஸ்லம்பட் சுப்ரீம் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில் எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் தொடர் போராட்டத்தால் இதுவரை ரூ.54,700 கோடிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தின் போது ரூ.50 லட்சம் மதிப்புள்ள அரசு சொத்துக்கள் சேதமப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்