முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தயார்: பான்-கீ-மூன்

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

நியூயார்க், செப்.10 - கன மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா - பாகிஸ்தானுக்கு உதவ ஐ.நா. தயாராக இருப்பதாக அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்தில் முன்பில்லாத அளவிற்கு கன மழை பெய்து 2 ஆயிரத்திற்கும் அதிக மான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. சுமார் 15 ஆயிரம் மக்களை ராணுவத்தினர் போராடி மீட்டு வருகின்றனர். இதே போல் காஷ்மீரை ஒட்டியுள்ள பாகிஸ்தானிலும் கன மழை வெள்ளத்தால் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக 500-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் வெள்ளத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கியுள்ளது. காஷ்மீரை பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ.1000 கோடி நிதி உதவி அறிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவுடன் ஒத்துழைக்க பாகிஸ்தான் தயாராக இருப்பதாக நவாஸ் கடிதம் எழுதினார். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உதவ தயாராக இருப்பதாக ஐநா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஐநா பொதுச் செயலாளர் பான் கீ மூன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஐநா அதிகாரிகள் டெல்லியில் உள்ள இந்திய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தியாவுக்கு எந்த வகையில் உதவ முடியும் என்பது குறித்து ஐநா ஆலோசித்து வருகிறது. இந்தியா ஏதேனும் உதவிகளை கேட்டால் ஐநா அதற்கு தயாராக உள்ளது. அதேபோல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானுடனும் ஐநா அதிகாரிகள் பேசிவருகின்றனர். தேவைப்பட்டால் அங்கு ஐநா மீட்பு படையினர் அனுப்பப்பட்டு நிவாரண பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக ஐநா மீட்பு படை தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago