முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நதிகளை தூய்மைப்படுத்த ஜெர்மனி - இந்தியா உடன்பாடு

செவ்வாய்க்கிழமை, 9 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.10 - டெல்லியில் பிரதமர் மோடியை ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர் பிராங்க் வால்டர் ஸ்டெயின்மியர் சந்தித்து பேசினார்.

அப்போது, நதிகளை தூய் மைப்படுத்தும் பணி, திடக்கழிவு மேலாண்மை, திறன் மேம்பாடு ஆகியவை தொடர்பாக இருநாடு களும் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப் பதாவது: "கடந்த 10 ஆண்டுகளில் ஜெர்மனி அடைந்துள்ள சிறப்பான பொருளாதார வளர்ச் சியை மோடி பாராட்டினார். இந்தியாவும், ஜெர்மனியும் ஜனநாயக மதிப்பீடுகளை மதித்து நடக்கின்றன. அடுத்த கட்ட தொழில் வளர்ச்சிக்கு தேவையான உந்து சக்தியை அளிக்கும் வகையில் இருநாடுகளும் போதிய திறனும், வளமும் பெற்றுள்ளன; ஒன்றையொன்று சார்ந்து இருக்கின்றன. உற்பத்தி, கட்டமைப்புத் துறையில் இரு நாடுகளும் கூட்டாளிகளாக செயல்பட வேண்டும்.

திறன் மேம்பாட்டில் ஜெர்மனி யின் அனுபவத்தை இந்தியாவுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். இந்திய இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க முன்வர வேண்டும். திடக்கழிவு மேலாண்மை, நதிகளை தூய்மைப்படுத்துதல் ஆகிய துறைகளில் இருநாடு களுக்கு இடையேயான ஒத்து ழைப்பை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பான வழிமுறைகளை இருநாடுகளின் பிரதிநிதிகளுக்கு இடையே நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டங்களில் விவாதிக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கும் இடையே யான நட்புறவை மேம்படுத்த ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் எடுத்து வரும் முயற்சி களுக்கு பாராட்டுத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த ஆண்டு இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஏஞ்சலா மெர்கலின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்