முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அரசுக்கு எதிராகப் போரிடும் வெளிநாட்டினர்

புதன்கிழமை, 10 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப்.11 - சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் கிளர்ச்சிப் படை உள்பட பல்வேறு குழுக்களில் 12,000 வெளிநாட்டினர் உள்ளனர் என்று லண்டனைச் சேர்ந்த தீவிரவாதத் தடுப்பு நிபுணர் பீட்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:

1980-ல் ஆப்கானிஸ்தானை ரஷ்யா ஆக்கிரமித்தது. அப்போது ரஷ்யாவுக்கு எதிராக 20,000 வெளிநாட்டினர் போரிட்டனர். இப்போது சிரியாவில் நடைபெறும் உள்நாட்டுப் போரில் 74 நாடுகளைச் சேர்ந்த 12,000 வெளிநாட்டினர் பங்கேற்றுள்ளனர்.

இஸ்லாமிக் ஸ்டேட், அல்-காய்தா ஆதரவு கிளர்ச்சிப் படைகளில் சேர்ந்துள்ள அவர்கள் அந்த நாட்டு ராணுவத்துக்கு எதிராக போரிட்டு வருகின்றனர். வளைகுடா நாடுகளைத் தவித்து மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கிளர்ச்சிப் படையில் இணைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்