முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், செப் 12 - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி, ஈராக்கில் நேற்று முன்தினம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அவரது வருகையை கண்டித்து பாக்தாத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 25 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் தீவிர தாக்குதல் நடத்தி பல பகுதிகளை கைப்பற்றி உள்ளனர். குர்தீஷ் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் கிணறுகளையும் பல நகரங்களையும் கைப்பற்றி உள்ளனர். இவர்களின் தாக்குதலை முறியடிக்க கடந்த மாதம் முதல் சலாஹிதீன் மற்றும் அன்பர் பகுதிகளில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஜான்கெர்ரி நேற்று முன்தினம் பாக்தாத் வந்தார். அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பாக்தாத்தின் பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர். பாக்தாத்தின் தென்கிழக்கே உள்ள நியூசிட்டி பகுதியில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் வெடிகுண்டு நிரம்பிய காரை மோதி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 5 போலீசார் பலியானார்கள். மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர். அடுத்த ஒரு மணி நேரத்தில் அங்குள்ள மார்க்கெட் ஒன்றில் மற்றொரு கார் குண்டு வெடித்தது. இதில் 14 பேர் பலியானார்கள். மேலும் 35 பேர் படுகாயமடைந்தனர். நேற்று முன்தினம் இரவு காகதிர் மாவட்டத்தில் போலீஸ் சோதனை சாவடியில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் போலீசார் உட்பட 6 பேர் பலியானார்கள். இதற்கிடையில் பாக்தாத்தில் பேசி ஜான்கெர்ரி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஈராக் மக்கள் வெற்றி பெற வேண்டும். அதற்கு அமெரிக்காவும் சர்வதேச நாடுகளும் தங்கள் ஆதரவை அளிக்கும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago