முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் நடிகர் மரணம்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2014      சினிமா
Image Unavailable

 

லண்டன், செப்.12 - ஜேம்ஸ்பாண்ட் பட வில்லன் மூன்ரேக்கர், ஸ்பை ஹூ லவ்டுமி ஆகிய படங்களில் ஜேம்பாண்டாக நடித்தவர் நடிகர் ரோஜர் மூர். இந்தப் படங்களில் வில்லனாக நடித்தவர் ரிச்சர்ட் கேல், 74 வயதான இவர் நேற்று முன்தினம் மரணம் அடைந்தார்.

அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் இறந்தார். கால் முறிவு ஏற்பட்டதால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், அவர் இறந்ததாக கூறப்பட்டது. இவர் ஜேம்பாண்ட் படங்களில் இரும்பு பல்லுடன் காட்சி அளிப்பார். 7 அடி 2 அங்குலம் உயரம் உள்ள இவர் எந்தவித விபத்திலும் சாகாமல் தொடர்ந்து ஜேம்ஸ்பாண்டுடன் மோதுவது போல கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்