முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் மீண்டும் 2 அணு உலைகள்

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, செப் 12 - ஜப்பானில் கடந்த 2011ம் ஆண்டில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு பெரியளவில் சுனாமி தாக்கியது. இதில் ஏராளமானோர் பலியானார்கள். பலர் வீடுகளை இழந்தனர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் சேதமடைந்தன. அங்கு கதிரியக்க பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஜப்பானில் இயங்கி வந்த 48 அணு உலைகள் மூடப்பட்டன.

தற்போது ஜப்பானில் நிலவி வரும் மின் பற்றாக்குறையை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதை தொடர்ந்து தெற்கு ஜப்பானில் சென்டாயில் உள்ள 2 அணு மின் உலைகளை மீண்டும் இயக்க கடந்த ஒரு மாத காலமாக பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடைபெற்றது. அவர்கள் மின் தேவையை கருத்தில் கொண்டு மீண்டும் 2 அணு மின் உலைகள் இயங்க ஆதரவு தெரிவித்தனர்.

இது தொடர்பாக அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் 400 பக்க அறிக்கையை கடந்த ஜூலை மாதம் ஜப்பான் அரசிடம் வழங்கியது. 2 அணு மின் உலைகள் மீண்டும் இயங்க அரசு அனுமதி அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும் இந்த 2 அணு மின் உலைகள் இயங்குவதற்கு ஜப்பானின் பசுமை இயக்கம் எதிர்ப்பு தெரிவித்து  வருகிறது. புகுஷிமாவில் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து ஜப்பான் அரசு பாடம் கற்றுக் கொள்ள மறுக்கிறது. இதற்கு பதிலாக மறு சுழற்சி முறையில் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை அரசு ஏற்க மறுக்கிறது. அணு மின் உலையினால் நாட்டுக்கு எந்நேரமும் ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்று ஜப்பான் பசுமை இயக்க தலைவர் கசுசுசுகி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago