முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

படகுகளை ஒருபோதும் திருப்பி தர மாட்டோம்: ராஜபக்சே

வியாழக்கிழமை, 11 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, செப் 12 - தமிழக மீனவர்களின் படகுகளை ஒரு போதும் திருப்பி தர மாட்டோம் என்று ராஜபக்சே திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

கடலில் மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்  பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை பிடித்து செல்கிறது. பின்னர் மீனவர்களை விடுதலை செய்யும் இலங்கை அரசு அவர்களது மீன்பிடி படகுகளை ஒப்படைக்க மறுத்து வருகிறது. இது பற்றி இலங்கை அதிபர் ராஜபக்சே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து இலங்கை கடல் பகுதியில் மீன் பிடிக்கிறார்கள். மேலும் மடிவலையை பயன்படுத்தி கடல் அடியி்ல் உள்ள மீன்வளத்தை சுரண்டி நாசப்படுத்துகிறார்கள். இது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் பெரும்பான்மை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கிறது. இலங்கையின் பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால்தான் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் பறிமுதல் செய்யப்படுகிறது என்றாலும் தினக்கூலிகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபடும் அப்பாவி மீனவர்களை விடுதலை செய்து விடுகிறோம். ஆனால் மீன்பிடி படகுகளை திரும்ப கொடுக்க முடியாது. அவ்வாறு படகுகளை திரும்ப கொடுத்தால் அதே படகில் மீண்டும் வந்து மீன்பிடித்து அதே தவறை திரும்பவும் செய்வார்கள். இலங்கை கடல் எல்லைக்குள் ஒன்றிரண்டு மட்டும் அல்ல, நூற்றுக்கணக்கான படகில் வந்து மீன் பிடிக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மோசமானவர்கள். சுற்றுச்சூழலையும் நாசம் செய்கிறார்கள். அவர்கள் இந்தியாவுக்கும் மோசமானவர்கள். மீன்களுக்கு எல்லைகள் கிடையாது. மீனவர்கள்தான் மீன்கள் இருக்கும் இடத்தை நாடி செல்கிறார்கள். இந்தியா, இலங்கை உறவில் இந்த பிரச்சினையைதான் தீவிரமாக கவனிக்க வேண்டியுள்ளது. இரு நாட்டு மீனவர்களும் கூடி பேசி வருகிறார்கள். கடைசியாக இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை மே மாதம் கொழும்பில் நடந்தது. இதில் எந்த முடிவும் எடுக்கப்படாமல் தேக்க நிலையில் உள்ளது. இவ்வாறு ராஜபக்சே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago