முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடை: ஐரோப்பிய யூனியன்

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

மாஸ்கோ, செப்.14 - உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டி, ரஷ்யா மீது புதிதாக மேலும் சில பொருளாதாரத் தடைகளை ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ளது.

உக்ரைனில், அரசுக்கும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த ஏப்ரல் முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை 3,000-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் மற்றும் ஆட்களை வழங்கி மோதலைத் தூண்டி விடுவதாக உக்ரைனும் மேற்கத்திய நாடுகளும் ரஷ்யா மீது குற்றம்சாட்டி வருகின்றன. இக்குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்து வருகிறது. இருப்பினும் உக்ரைன் விவகாரத்தில் தலையிடுவதாகக் கூறி ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. ரஷ்ய துணைப் பிரதமர் உட்பட 24 தனிநபர்கள் மீது ஐரோப்பிய ஒன்றியம் ஏற்கெனவே பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.

தற்போது மேலும் சில பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் மிகப்பெரிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ராஸ்னெப்ட், அரசுக்குச் சொந்தமான எரிவாயுக் குழாய் மற்றும் போக்குவரத்து நிறுவனமான டிரான்ஸ்னெப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப் பட்டுள்ளன. ரஷ்யாவின் பெரும் எண்ணெய் நிறுவனங்கள், நிதி மற்றும் பாதுகாப்புத் துறை தொடர்பான நிறுவனங்கள் மீது சொத்து முடக்கம், விசா தடை உள்ளிட்ட தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் செப்டம்பர் இறுதியில், உக்ரைனுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்த பிறகு இத்தடைகள் நீக்கப்படலாம் எனத் தெரிகிறது.

ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஹெர்மன் வான் ரோம்புய் கூறும்போது, "இந்த பொருளாதாரத் தடைகளை அமல்படுத்துவது, நிறுத்தி வைப்பது அல்லது தள்ளுபடி செய்வது என்பது, இம்மாத இறுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்த பிறகு கிடைக்கும் முடிவுகளைப் பொறுத்தது" எனத் தெரிவித்துள்ளார். பொருளாதார தடைகள் விதிக்கப்பட்ட பிறகு, ரஷ்ய ரூபிளின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு வரலாறு காணாத வகையில் 37.72 ரூபிளாக வெள்ளிக்கிழமை குறைந்தது.

உக்ரைனில் ரஷ்யாவின் சட்டவிரோத தலையீட்டைக் கண்டிக்கும் விதத்தில், ரஷ்யா மீது கடுமையான தண்டனை நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என அமெரிக்க அதிபர் ஒபாமா வியாழக்கிழமை தெரிவித்திருந்தார். ரஷ்யாவைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

உக்ரைன் எல்லையைத் தாண்டி ரஷ்ய வீரர்கள் சுமார் 1,000 பேர் முகாமிட்டிருப்பதாக நேட்டோ மற்றும் உக்ரைன் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் இந்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago