முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எபோலாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400-ஆக அதிகரிப்பு

சனிக்கிழமை, 13 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெனீவா, செப்.14 - எபோலா நோய் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400-ஆக அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் மார்கரெட் சான் ஜெனீவாவில் தெரிவித்த விவரம் வருமாறு:

எபோலா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,784-ஆக உள்ளது. இந்த நோய் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,400 ஆக உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்களுக்கு உதவி புரியவும் கியூபாவிலிருந்து 165 பேர் கொண்ட மருத்துவக் குழு மேற்கு ஆப்பிரிக்கா சென்றுள்ளது.

இந்தக் குழுவில் மருத்துவர்கள், செவிலியர்கள், தொற்று நோயத் தடுப்பு நிபுணர்கள், அவசர சிகிச்சை நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்குவர். எபோலாவுக்கு எதிராக நாம் போர் தொடுக்க வேண்டுமேன்றால், மருத்துவர்கள் அடங்கிய பெரும் படை பலம் வேண்டும். இந்தப் போரில் ஈடுபட கியூபா முடிவெடுத்துள்ளதை வரவேற்கிறோம் என்று மார்கரெட் சான் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago