முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய செவிலியர் குடும்பத்துக்கு ஆஸ்தி., வானொலி நிதியுதவி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

மெல்போர்ன், செப் 15:

இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டனின் முதல் கர்ப்பம் குறித்த தகவலை ஆஸ்திரேலிய வானொலியில் கசிய விட்ட காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட இந்திய செவிலியரின் குடும்பத்திற்கு அந்த வானொலி நிலையம் ரூ. 3.34 கோடி நிதியுதவி வழங்கி உள்ளது.

கடந்த 2012 டிசம்பர் மாதம் இங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் முதல் முறையாக கர்ப்பம் தரித்திருந்தார். அப்போது அவர் மருத்துவ பரிசோதனைக்காக லண்டனில் உள்ள கிங் எட்வர்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வார்டில் ஜெசிந்தா சல்தன்ஹா என்பவர் பணியில் இருந்தார். அவர் கர்நாடக மாநிலம் மங்களூரை சேர்ந்தவர்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய வானொலியின் அறிவிப்பாளர்கள் கிரேக் மைக்கேல், கிறிஸ்டியன் ஆகியோர் தொலைபேசியில் மருத்துவமனையை தொடர்பு கொண்டனர். இங்கிலாந்து ராணி எலிசபெத், இளவரசர் சார்லஸ் ஆகியோரின் குரலில் ஜெசிந்தாவிடம் பேசி இளவரசி கேத் மிடில்டனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து அதை வானொலியில் ஒலிபரப்பினர். இதையறிந்ததும் ஜெசிந்தா பின்னர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அந்த ஆஸ்திரேலிய வானொலி நிலையம் தற்போது ஜெசிந்தாவுக்கு ரூ. 3.34 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது. இது குறித்து ஆஸ்திரேலிய வானொலி நிலைய செய்தி தொடர்பாளர் கூறுகையில், ஜெசிந்தா இழப்பை இந்த நிதியால் ஈடு செய்ய முடியாது. எனினும் அவரது குடும்பத்தினருக்கு இந்த நிதி உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்