முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய அமெரிக்க உறவில் முன்னேற்றம்: அமெரிக்க எம்.பி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப் 15 - நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்று 100 நாட்கள் நிறைவுற்றுள்ள நிலையில் இந்தியா அமெரிக்கா இடையேயான நல்லுறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று அமெரிக்க நாடாளுமன்ற அவை குழுவின் இணை தலைவர் மார்க் வார்னர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வாஷிங்டனில் தெரிவித்ததாவது,

இந்த நூறு நாட்களில் இரு நாடுகளின் தலைமையும் இணைந்து செயல்படுவதால் நல்லுறவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதை காண மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த மாத இறுதியில் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க பயணத்துக்கு அடித்தளமிடும் வகையில் புதிய எழுச்சியுடனும் உத்வேகத்துடனும் நாம் செயல்பட வேண்டும். வெறும் பேச்சோடு நின்று விடாமல் ஆக்கபூர்வமாக செயல்படுவோம் என்பதை அமெரிக்கா காண்பிக்க வேண்டும். இரு நாடுகளிடையேயான நல்லுறவை உறுதிப்படுத்த முன்னதாக நான் தெரிவித்த பல்வேறு முக்கிய ஆலோசனைகளை செயல்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் உள்ளது என்றார் அவர்.

புதிய அரசின் நூறு நாள்கள் என்கிற செயல் திட்டத்தை வார்னர் கடந்த மே மாதம் வெளியிட்டார். அமெரிக்கா இந்தியா இடையே நல்லுறவை மேம்படுத்த இதில் பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இரு நாடுகளிடையே பேச்சுவார்த்தை நடத்தும் போது பாதுகாப்பு துறை சார்ந்த தொழில் நுட்பம் தொடர்பாக பேச்சு நடத்த முக்கிய நபரை நியமிக்க வேண்டும் என்ற ஆலோசனையும் அதில் உள்படும். இந்நிலையில் மோடி பயணத்தின் போது அமெரிக்க பாதுகாப்பு மற்றும் தொழில் நுட்ப துறை சார்பில் பேச்சு நடத்தும் குழுவுக்கு அந்நாட்டின் தொழில் துறை இணை அமைச்சர் தலைமை ஏற்பார் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்க பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். செப்டம்பர் 29,30 ஆகிய இரு நாட்களும் அவர் அதிபர் ஒபாமாபுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்