முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப்.15 - டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில், இரட்டையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய ஜோடி வெற்றி பெற்றது.

பெங்களூரில் 3 நாள் நடைபெறும் இந்த தொடரின் 2-வது நாளன்று நடந்த இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ரோஜன் போபண்ணா ஜோடி, செர்பியாவின் ஜிமோன்ஜிச், இலிஜாபசோ ஜச் ஜோடியுடன் மோதியது. இதில் இந்திய ஜோடி 1-6, 6-7, 6-3, 6-3, 8-6 என்ற கணக்கில் செர்பிய ஜோடியை வீழ்திதயது.

இதையடுத்து, செர்பிய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முன்னதாக, நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டங்களில் இந்தியாவின் சோம்தேவ் தேவர்மன், யூகி பாம்ப்பி ஆகியோர் தோல்வியை தழுவினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்