முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அருங்காட்சியகத்தில் அரிய வகை வைரம்

ஞாயிற்றுக்கிழமை, 14 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.15 - அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகத்தில் அரியவகை வைரமான ‘புளு மூன் டயமண்ட்’ காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

உலகில் நீல வண்ண வைரங்கள் மிகவும் அரிதானவை. அந்த வரிசையில் சில வைரங்கள் மட்டுமே தற்போது உள்ளன. தென்ஆப்பிரிக்க சுரங்கத்தில் 1905-ம் ஆண்டில் ‘புளு மூன் டயமண்ட்’ வெட்டியெடுக்கப்பட்டது. இந்த வைரத்தை கோரா இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் கடந்த பிப்ரவரியில் ரூ.153 கோடியே 60 லட்சத்துக்கு வாங்கியது.

மிகவும் அரிதான இந்த ‘புளு மூன் டயமண்ட்’ வைரம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. 2015 ஜனவரி வரை இது இங்கு இருக்கும். தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் அருங்காட்சியகத்தில் சுமார் 3000-க்கும் மேற்பட்ட வைரங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் ‘புளு மூன் டயமண்ட்’ வைரத்தை காண மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்