முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகை பதிவேட்டை கொடுத்தவர் விவரத்தை தெரிவிக்க உத்தரவு

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப் 16 - 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் வழக்கில் தொடர்புடையவர்களை சிபிஐ இயக்குனர் ரஞ்சித் சின்கா தனது இல்லத்தில் சந்தித்தார் என்று பிரபல வக்கீலும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவருமான பிரசாந்த் பூஷன் குற்றம் சாட்டி இருந்தார். அதோடு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடர்ந்தும் இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது இது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்க சிபிஐ இயக்குனருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு இருந்தது. அப்போது பிரசாந்த் பூஷன் சிபிஐ இயக்குனர் வீட்டின் வருகை பதிவேட்டை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தார். தனது இல்ல வருகை பதிவேட்டை கொடுத்தது யார் என்பதை பிரசாந்த் பூஷன் வெளியிட வேண்டும் என்று சிபிஐ இயக்குனர் வலியுறுத்தி இருந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சிபிஐ இயக்குனரின் வீட்டு வருகை பதிவேட்டை யார் கொடுத்தார் என்ற விவரத்தை பிரசாந்த் பூஷன் வெளியிட வேண்டும் என்று அவருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. வருகை பதிவை கொடுத்தவரின் விவரத்தை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்யுமாறு பிரசாந்த் பூஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். வருகை பதிவில் உள்ள விவரங்கள் 90 சதவீதம் போலியானதும், சில விவரங்களை மட்டுமே உண்மையானது என்று சிபிஐ இயக்குனர் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தார். வருகை பதிவேடு சம்பந்தமான அனைத்து ஆவணங்கள் மற்றும் பிரமாண பத்திரத்தை சீலிடப்பட்ட கவரில் பாதுகாப்பு கருதி செகரட்டரி ஜெனரலிடம் தாக்கல் செய்யுமாறு சிபிஐ இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு வருகிற 22ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்