முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.எஸ். தீவிரவாதிகளை வேட்டை யாடுவோம்: கேமரூன்

திங்கட்கிழமை, 15 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப் 16 - ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பிடியில் இருந்த இங்கிலாந்து தொண்டு நிறுவன ஊழியர் டேவிட் ஹெய்ன்சை தீவிரவாதிகள் தலையை துண்டித்து கொலை செய்தனர். இந்த காட்சி அடங்கிய வீடியோவை அவர்கள் இணையதளம் மூலம் ஒலிபரப்பு செய்தனர். இது இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வீடியோ வெளியானதும் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். பின்னர் அவர் கூறியதாவது,

ஐ.எஸ். தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசு என்ற பெயரில் கொடூரமாக செயல்பட்டு வருகிறார்கள். அவர்கள் முஸ்லீம்கள் அல்ல. அரக்கர்கள். இஸ்லாமிய அரசின் ஆயுத கும்பல்களை நாங்கள் வேட்டையாடி அழிப்போம். இங்கிலாந்தை சேர்ந்தவரை இன்னொரு இங்கிலாந்து நாட்டுக்காரரே கொடூரமாக கொலை செய்து இருக்கிறார். இந்த மோசமான செயலை கண்டு நாடே அறுவறுப்பு அடைந்து உள்ளது. கொலை செய்யப்பட்ட டேவிட் ஹெய்ன்ஸ் இங்கிலாந்து நாயகன். அவருடைய கொலைக்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு பதில் சொல்ல வேண்டியது வரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டேவிட் ஹென்சின் குடும்பத்தினர் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் இனம், மதம் எதுவும் பார்க்காமல் மனிதர்களுக்கு உதவுவதேயே தனது வாழ்வின் தத்துவமாக கொண்டவர் டேவிட் ஹெய்ன்ஸ். அவருக்கு இப்படி ஒரு முடிவு ஏற்பட்டுள்ளது எங்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர். இங்கிலாந்தின் இஸ்லாமிய சமூக அமைப்பின் தலைவர் சுக்ரா அகமது வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமிய அரசு அமைப்பினர் செய்த இந்த கொலை இஸ்லாத்தின் போதனைகளுக்கு முற்றிலும் முரணான காட்டுமிராண்டித்தனமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்