முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீசாரை மிரட்டிய இம்ரான்கான் மீது வழக்கு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.17-

கட்சி தொண்டர்களை விடுவிக்கும்படி போலீசாரை மிரட்டியதால் இம்ரான்கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலக வலியுறுத்தி முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக் - இ - இன்சாப் கட்சியும், மதகுரு தகிருல் காத்ரியின் பாத் கட்சியனரும் இஸ்லாமாபாத்தில் பாராளுமன்ற்ததை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இப்போராட்டம் நடந்து வருகிறது. பிரதமர் நவாஸ் செரீப் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது. தொடர்ந்து நடைபெறும் என இம்ரான்கான் அறிவித்துள்ளார்.

எனவே அவரது கட்சி தொண்டர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இஸ்லாமாபாத் புறநகரான பானிகாலா என்ற இடத் தில் போராட்டத்தில் ஈடுபட்ட இம்ரான்கான் கட்சி தொண்டர்கள் 15 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி சென்றனர். அதை அறிந்த இம்ரான்கான் அங்கு விரைந்து வந்து வாகனங்களை மறித்தார். கைது செய்யப்பட்ட தொண்டர்களை உடனே விடுவிக்கும்படி போலீசாரை மிரட்டினார்.

அதற்கு போலீசார் மறுத்துவிட்டனர். இதனால் அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து கடமையை செய்ய விடாமல் தடுத்ததாக இம்ரான்கான் மீது பானி காலா போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்ப்டடுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் மந்த நிலையை அடைந்துள்ளது. சரியான உணவு கிடைக்காததால் உடல் நலக்குறைவு ஏற்படுவதாக கூறி பாத கட்சி தொண்டர்கள் இஸ்லாமாபாத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.

ஆனால் இம்ரான்கான் கட்சி தொண்டர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமாபாத், ராவல் பிண்டி மற்றும் புறநகர் பகுதிகளில், இருந்து போராட்டத்தில் , பங்கேற்றுள்ளனர். எனவே, அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்