முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெர்ஸ் நோயை கட்டுப்படுத்த சவுதி அரேபியா தீவிரம்

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ரியாத், செப் 18:

சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் மெர்ஸ் எனும் உயிர்க்கொல்லி வைரஸ் நோய் பரவி வருகிறது. இதில் சவுதி அரேபியாவில் மட்டும் 300 பேர் உயிரிழந்துள்ளனர். 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்கா நகருக்கு அடுத்த மாதம் ஹஜ் யாத்திரை தொடங்குகிறது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவார்கள். கடந்த ஆண்டு 12 லட்சம் பேர் வந்தனர். இந்த ஆண்டு இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மெர்ஸ் நோய் பரவி இருப்பதால் யாத்திரை வருபவர்களுக்கு பாதிப்பு ஏற்பட கூடாது என்பதற்காக சவுதி அரேபியா அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மெக்கா, மதீனா நகரங்களில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெர்ஸ் நோய் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய் யாத்திரை வருபவர்களை தாக்காமல் இருப்பதற்கு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து உள்ளது. எனவே ஹஜ் யாத்திரை வருபவர்கள் அச்சப்பட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்