முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் மீது கொலை வழக்கு

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், செப்.18 - பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது நடந்த கலவரத்தில் எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்ததாகவும், இதனால் அந்த தேர்தலில் நவாஸ் ஷெரீப் வெற்றி செல்லாது என்பதால் அவர் பதவி விலக வேண்டும் என்று கோரி முன்னாள் கிரிக்கெட் வீரரான இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப், மதத் தலைவர் தாஹிர் உல் காதிரியின் பாகிஸ்தான் அவாமி தெஹ்ரிக் ஆகிய இரு கட்சிகளும் போராட்டங்கள் நடத்தின. நவாஸ் ஷெரீப் பதவி விலக, அந்நாட்டின் நாடாளுமன்றத்தின் முன்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் கலவரமாக வெடித்தன. அப்போது நடந்த மோதலில் 14 பேர் பலியாகினர், 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையே இந்த கலவரத்தின்போது மோதலை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை, திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலைச் சதி என்பது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் சிலர் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago