முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மே.ஆப்பிரிக்காவில் எபோலாவுக்கு இதுவரை 2460 பேர் பலி

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெனீவா, செப்.18 - மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலா நோய்க்கு இதுவரை 2,461 பேர் உயிரிழந்துள்ளனர். 4,985 பேர் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிதித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள கினியா, லைபீரியா மற்றும் சியர்ரா லியோனி உட்பட 5 நாடுகளில் எபோலா பரவி வருகிறது. எபோலா நோயை குணப்படுத்தவோ, தடுப்பு மருந்தோ இல்லாததால் ஏராளமானோர் பலியாகி உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். மேற்கு ஆப்பிரிக்காவின் 5 நாடிகளில் இந்தாண்டு தொடக்கம் முதல் கடந்த 13-ஆம் தேதி வரை எபோலா நோய் தாக்குதலில் 2,461 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.

கினியாவில் இந்தாண்டு துவக்கத்தில் இருந்து இதுவரை 936 பேர் எபோலா நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 595 பேர் பலியாகிவிட்டனர். லைபீரியாவை பொறுத்தவரை எபோலா நோய் தாக்குதலால் இதுவரை 1,296 பேர் இறந்துள்ளனர். சியர்ரா லியோனியில் எபோலா நோய் தாக்குதலில் 1,620 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்களில் கடந்த 13-ஆம் தேதி வரை 562 பேர் பலியாகியுள்ளனர். நைஜீரிய.ாவில் எபோலா நோய் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். செனிகளில் ஒருவர் பலியாகியுள்ளார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 21 நாட்களில் மட்டும் எபோலா தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 57 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago