முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கனில் தற்கொலை படை தாக்குதலில் 4 வீரர்கள் பலி

புதன்கிழமை, 17 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், செப்.18 - ஆப்கானிஸ்தானில் அமெரிக்க தூதரகம் அருகே தீவிரவாத தற்கொலை படை தாக்குதலில் 4 நேட்டோ வீரர்கள் பலியாகியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உளஅள சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அமெரிக்க தூதரக பகுதிகளில் நேட்டோ படை வீரர்கள் தினமும் பாதுகாப்பு ஒத்திகை நடத்துகின்றனர். நேற்று முன் தினம் பாதுகாப்பு ஒத்திகை முடித்துவிட்டு நேட்டோ வீரர்கள் கவசவாகனத்தில் முகாமுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அமெரிக்க தூதரகத்தில் இருந்த ஏர்போர்ட் செல்லும் சாலையில், வெடிகுண்டுகள் நிரப்பிய காரை நேட்டோ வாகனத்தின் மீது மோத செய்து தற்கொலை படை தீவிரவாதி தாக்குதல் நட்ததினான். இதில் நேட்டோ வாகனம் நொறுங்கி சிதறியது. அதில் இருந்த வீரர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். மேலும் வீரர்கள், பொதுமக்கள் என 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

உயிரிழந்த வீரர்களில் 2 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள், ஒருவர் போலந்து நாட்டைச் சேர்ந்தவர். கார் குண்டு தாக்குதல் நடந்ததும், அப்பகுதியே கரும்புகை மண்டலமாக காணப்பட்டது. சாலையில் சென்ற பல கார்கள் சேதமடைந்தன. அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. கட்டிடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் உடைந்து சிதறின. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு வீரர் உயிரிழந்தார்.இந்த தாக்குதலுக்கு தலிபான் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்க தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர், என தலிபான் செய்தி தொடர்பாளர் அப்துல் கஹார் பால்கி இணையதளத்தில் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானில் தற்போது 41 ஆயிரம் நேட்டோ வீரர்கள் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த 29 ஆயிரம் வீரர்களும் போலந்தை சேர்ந்த 300 வீரர்களும் இந்தாண்டு இறுதிக்குள் வெளியேறுகின்றனர். மீதியுள்ள 12 ஆயிரம் நேட்டோ வீரர்கள் 2015-ஆம் ஆண்டு வரை பயிற்சி மற்றும் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்