முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிகினி ஆடை சர்ச்சை: மன்னிப்பு கேட்டார் தாய்லாந்து பிரதமர்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பாங்காக், செப்.19 - பிகினி ஆடை அணிந்தால் குற்றங்கள் நடக்கத்தான் செய்யும் என்று தான் கூறிய கருத்தை திரும்ப பெற்றுள்ள தாய்லாந்து பிரதமர், பிரயுத் சன்-ஒசா, தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஹன்னா விதரிட்ஜ் என்ற 23வயது பெண்ணும், டேவிட் மில்லர் என்ற 24வயது நண்பரும் தாய்லாந்து நாட்டின் கோ-டாவ் என்ற பகுதியில் கடந்த திங்கள்கிழமை மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். சுற்றுலா சென்ற இடத்தில் தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த பிரிட்டன் அரசு, தாய்லாந்து தூதரகத்தை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

இதனிடையே, "அழகாக இல்லாதவர்களுக்கு பிகினி ஆடை பாதுகாப்பாக இருக்கலாமே தவிர பிறருக்கு பிகினி உடை பாதுகாப்பானதாக இருக்காது" என்று பிரயுத் சன்-ஒசா, போலீஸ் அதிகாரிகளிடம் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. இதற்கு பல நாடுகளும் கண்டனம் தெரிவித்த நிலையில், பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த பிரயுத் சன்-ஒசா, தனது கருத்தை திரும்ப பெறுவதாகவும், அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago