முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சியில் 7 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

கராச்சி. செப்.19 - பாகிஸ்தானின் கராச்சியில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீடுகளை கண்டுபிடித்து போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 7 தீவிரவாதிகள் சுக்கு கொல்லப்பட்டனர். மேலும் 7 பேர் சரண் அடைந்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள கராச்சி வர்த்தக தலைநகர். அரசால் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஏராளமான தீவிரவாதிகள் கராச்சியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கராச்சி நகரில் ஆப்கானிஸ்தான் அகதிகள் தங்கியுள்ள பாஸ்தி முதல் சோராப் கோத் வரையுள்ள பகுதிகளில் போலீசார் தீடிர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தீவிரவாதிகள் பதுங்கியுள்ள வீடுகளை கண்டுபிடித்து சோதனையிட்டனர். ஒரு வீட்டில் சோதனை நடத்தும்போது, பக்கத்து வீடுகளின் மாடியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் துப்பாக்கியால் போலீசாரை சுட்டனர். போலீசாரும் பதில் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் 7 தீவிரவாதிகள் பலியானார்கள். மேலும் வீட்டுக்குள் பதுங்கியிருந்த 7 தீவிரவாதிகள் போலீசாரிடம் சரண் அடைந்தனர்.

அந்த வீட்டில் இருந்து ஏராளமான ஏகே ரக துப்பாக்கிகள், வெடிகுண்டுகள் மற்றும் வெடிப்பொருட்களை போலீசார் கைப்பற்றினர் என்று மாலிர் பகுதி போலீஸ் கண்காணிப்பாளர் ராவ் அன்வர் கூறினார். கராச்சியை தொடர்ந்து சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாதிகளை ஒழிக்க நேற்று முதல் அதிரடி சோதனை நடத்தப்படுகிறது. இதுகுறித்து சிந்து மாகாண முதல்வருக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது என்றும் ராவ் அன்வர் கூறினார்.

சிந்து மாகாணத்தில் கடந்த சில மாதங்களாக தேடுதல் வேட்டையில் 6 குற்றவாளிகள் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேர தீவிரவாத வேட்டையில், முன்னாள் பெண் கவுன்சிலர், 2 போலீசார் உட்பட 10 பேர் பலியாகியுளஅளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்