முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய எல்லைக்குள் மீண்டும் சீன வீரர்கள் ஊடுருவல்

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப்.19 - இந்தியா - சீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்னை நீடித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைவதும் அடிக்கடி ஊடுருவுவதும் சீன ராணுவத்தின் வாடிக்கையாக உள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக இது அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் சீன வீரர்கள் ஆயிரம் பேர் இந்திய எல்லைக்குள் ஊடுருவினர். ஆயுதங்களுடன் வந்த அவர்கள் இந்திய எல்லைக்குள் 5 கிலோமீட்டர் தூரம் முன்னேறியதாக கூறப்படுகிறது. இவர்களை இந்திய வீரர்கள் ஆயிரம் பேர் தடுத்துள்ளனர். மோதல் எதுவும் இல்லாவிட்டாலும் பதற்றம் நீடிக்கிறது. இதே பகுதியில், கடந்த வாரம் ஏராளமான தொழிலாளர்களுடனும், கட்டுமான பொருட்களுடனும் சீன ராணுவத்தினர் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி ஊடுருவினர். என்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதியில் சீன ராணுவத்தினர் சாலை அமைத்து வருகின்றனர். இங்கிருந்து 80 கி.மீ. தொலைவில் நமது எல்லைக்குள் டெம்சோக் என்ற இடத்தில் பாசன கால்வாய் வெட்டுவதை எதிர்த்து போராட்டம் நடத்த தங்கள் மக்களை சீன ராணுவம் தூண்டிவிட்டுள்ளது. இங்கு தங்கள் நாட்டு மக்கள் பாதுகாப்புக்காக 40 சீன வீரர்கள் முகாமிட்டுள்ளனர். இதையடுத்து, எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது.

இப்பிரச்னை குறித்து இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி பேசியதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நேற்று நடந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையின்போது மீண்டும் இப்பிரச்னை குறித்து மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்