முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லைப் பிரச்சினை: மோடி - ஜி ஜின்ஜிங் கூட்டாக பேட்டி

வியாழக்கிழமை, 18 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.19 - இந்தியா - சீனா உறவின் முழு பலனையும் பெற வேண்டும் என்றால், எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்றும், எல்லையில் சுமுக நிலை நிலவ இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:-

"இந்தியா - சீனா உறவின் முழு பலனையும் பெற வேண்டும் என்றால், எல்லையில் அமைதி நிலவ வேண்டும். எல்லையில் சுமுக நிலை நிலவ, இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லைப் பிரச்சினை குறித்து சீன அதிபருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, எல்லைக் கட்டுப்பாட்டு விவகாரத்திற்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியதோடு, எல்லையில் சீன அத்துமீறல்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களாக பொருளாதாரம், அரசியல், பாதுகாப்பு தொடர்பான அனைத்து விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. அதன் அடிப்படையில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் மேற்கொள்ள நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். வர்த்தக ரீதியாக நிலவும் கெடுபிடிகளை சீன அதிபரிடம் எடுத்துரைக்கப்பட்டது. இந்திய நிறுவனங்கள் சீனாவில் முதலீடு செய்ய ஏதுவாக விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவில், அடுத்த 5 ஆண்டுகளில் 20 பில்லியன் டாலர் அளவில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய சீனா உறுதி அளித்துள்ளது. இந்தியாவுடன், சமூக பயன்பாட்டிற்கான அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்த பேச்சுவார்த்தையை துவக்க சீனா முன்வந்துள்ளது. இவ்வாறு மோடி கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினையை பிரதமர் மோடி முன்நிறுத்திப் பேசியதை அடுத்து சீன அதிபர் ஜி ஜின்பிங், "இந்தியா - சீனா இடையேடான எல்லையை வரையறுக்க வேண்டும். அதுவே எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண உதவும். இரு நாடுகளும் பரஸ்பரம் அந்தந்த நாட்டின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். எல்லைப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். எனவே சீனா விரும்புகிறது" என தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது "பிரதமர் மோடியுடனான பேச்சு ஆக்கப்பூர்வமாக அமைந்தது. அடுத்த ஆண்டு, மோடி சீனா வருகை தர வேண்டும். 2015-ம் ஆண்டு சீனாவில், 'விசிட் இந்தியா' ஆண்டாக கடைபிடிக்கப்படும்" என்றார்.

முன்னதாக, மோடி - ஜி முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ரயில்வே, விண்வெளி உள்ளிட்ட 12 துறைகளில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்