முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தனது சொந்த ஊருக்கு வருமாறு மோடிக்கு சீன அதிபர் அழைப்பு

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பெய்ஜீங் , செப்.21 - சீன அதிபர் ஜீ ஜின்பிங், தனது சொந்த ஊரான ஷியானுக்கு மருமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து சீன அரசு தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்துக்கு, ஜீ ஜின்பிங் சென்றார். அங்கு மோடியுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, அவரை தனது சொந்த ஊரான ஷியானுக்கு வருமாறு ஜின்பிங் அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து மோடியிடம், சீனாவில் இருந்து 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வந்த புத்த துறவியுவான் சவாங் குறித்து ஜின்பிங் கூறினார். புத்தமதம் தொடர்பான ஆவணங்களை சேகரிப்பதற்காக இந்தியா வந்த யுவான் சுவாங், இந்தியாவில் 16 ஆண்டுகள் தங்கியிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பின்னர் சீனாவுக்கு திரும்பிய யுவான் சுவாங், தனது கடைசிய கால்ததை ஷியானில் கழித்ததாகவும், அப்போது அங்குள்ள மக்களிடம் புத்தமத கருத்துகளை பரப்பியதாகவும் மோடியிடம் ஜின்பிங் கூறினார். இதைக் கேட்ட நரேந்திர மோடி, தனது சொந்த ஊரானவதோதராவுக்கு யுவான் சுவாங் வருகை புரிந்ததாக குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இரண்டாம் உலகப் போரின்போது சீனாவில் சேவையாற்றிய இந்திய மருத்துவர் துவாரகாநாத் கோட்னிஸ் குடும்பத்தினரை, ஜீ ஜின்பிங் டெல்லியில் சந்தித்துப் பேசினார். இரண்டாம் உலகப் போரின்போது, சீனா - ஜப்பான் இடையே கடந்த 1942-ஆம் ஆண்டு போர் நடைபெற்றபோது, சீனப் படையினருக்கு சிகிச்சையளிப்பதற்காக இந்தியாவில் இருந்து சென்ற மருத்துவக் குழுவில் துவாரகாநாத் கோட்னிஸ் இடம்பெற்றிருந்தார். போரின்போது ஏராளமான சீனர்களுக்கு சிகிச்சையளித்து அவர் காப்பாற்றினார்.

பின்னர் சீனாவில் தொடர்ந்து 4 ஆண்டுகள் பணியாற்றிய கோட்னிஸ், அந்நாட்டிலேயே தனது 32-வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்தச் சேவையைப் பாராட்டும் வகையில், சீனத் தலைவர்கள் தங்களது இந்திய வருகையின்போது, கோட்னிசின் குடும்பத்தினரை சந்தித்து பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதன்படி சீன முன்னாள் பிரதமர் சூஎன்லாய், முன்னாள் அதிபர்கள் ஜியாங்ஜெமின், ஹூ ஜிந்தாவோ ஆகியோர் கோட்னிசின் குடும்பத்தினரை சந்தித்துப் பேசினர்.

தற்போதைய அதிபர் ஜீ ஜின்பிங்கும், 93 வயதான கோட்னிசின் சகோதரி மனோரமா, அவரது குடும்பத்தினரை டெல்லியில் சந்தித்து பேசி அவர்களை கொரவித்தார். அப்போது அவர்களிடம் ஜீ ஜின்பிங் கூறுகையில், தனது மதிப்புமிக்க உயிரை, சீனாவுக்காக தியாகம் செய்த சிறந்த மனிதர் கோட்னிஸ் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்