முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் ஐஎஸ் மீது தாக்குதலைத் தொடங்கியது பிரான்ஸ்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

பாரிஸ், செப்.21 - ஈராக்கிலுள்ள இஸ்லாமிய தேச இலக்குகள் மீது பிரான்ஸ் முதல்முறையாக தாக்குதல் நிகழ்த்தியது.

பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்த நாடு பிரான்ஸ். எனினும், தற்போது ஈராக்கில் ஐஎஸ்சுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் தொடுக்கும் முதல் நாடாக பிரான்ஸ் ஆகியுள்ளது. இதுகுறித்து அநாநாட்டு அதிப்ர ஃபிரான்சுவா ஹொலாந்த் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஐஎஸ் பயங்கரவாதிகளின் கிடங்கு ஒன்றின் மீது, எங்களது ரஃபேல் ரக போர் விமானங்கள் தாக்குதல் நிகழ்த்தின. இத்தாக்குதலில் அந்தக் கிடங்கு முற்றிலுமாக அழிக்கப்பட்டது. இது போன்ற தாக்குதல்கள் இனி வரும் நாள்களில் தொடர்ந்து நிகழ்த்தப்படும். ஈராக்கின் இறையாண்மையைக் காக்கும் பொருட்டு, அந்நாட்டு ராணுவம் மற்றும் குர்து படைகளுக்கு பிரான்ஸ் அளித்து வரும் உதவிகள் குறித்து பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் பிரதமர் விளக்கமளிப்பார் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈராக்கில் தாக்குதல் நிகழ்த்தும் பரபர்பபான அறிவிப்பை ஹொலாந்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிட்டார். அப்போது அழர் கூறுகையில், ஈராக்கில் கணிசமான பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு வான்வழித் தாக்குதல் மூலம் ஆதரவளிக்க முடிவு செய்துள்ளோம்.

ஈராக் அரசின் வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாத இலக்குகள் இனம் காணப்பட்ட உடனேயே, எங்களது தாக்குதல் ஆரம்பமாகும், என்று தெரிவித்தார். ஏற்கெனவே, ஈராக்கிலுள்ள பயங்கரவாத நிலைகளை உளவு விமானங்கள் மூலம் வேவு பார்க்கும் பணியை பிரான்ஸ் தொடங்கியது. மேலும், ஐஎஸ் சுடன் போராடும் குர்து படையினருக்கு ஆயுத உதவி அளித்து வருகிறது. கடந்த வாரம் ஈராக் சென்ற அதிபர் ஹொலாந்த், ஐஎஸ்சுக்கு எதிராக அந்நாட்டு நடவடிக்கைகளுக்கு தனது ஆதரவை வெளிப்படுதியிருந்தார்.

எனினும், ஐஎஸ் மீது சிரியாவிலும் தாக்குதல் தொடுப்போம் என அறிவித்துள்ள அமெரி்ககாவைப் போலின்றி, ஈராக்கில் மட்டுமே தங்களது நடவடிக்கை இருக்கும் என்று பிரான்ஸ் கூறியுள்ளது. இதுகுறித்து ஹொலாந்த் கூறுகையில், ஐஎஸ்சுக்கு எதிரான நடவடிக்கைகளில் தரைப்படையினர் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள். ஈராக்கைத் தாண்டி எங்களது நடவடிக்கைகள் இருக்காது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago