முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2100-ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை 1100 கோடியாக உயரும்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

லண்டன், செப்.21 - உலக மக்கள் தொகை வளர்ச்சி குறித்து வாஷிங்டன் பல்கலைக்கழகமும், ஐநா சபையும் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டன. தற்போது உலக மக்கள் தொகை 400 கோடியாக உள்ளது.

அது இந்த 21-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அதாவது 2100-ஆம் ஆண்டில் 1110 கோடியாக உயரும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது ஏற்கெனவே கணக்கிட்டத்தை விட 200 கோடி மக்கள் தொகை கூடுதலாகும். உலகில் ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்து வருகிறது. அங்கு 4 மடங்கு மக்கள் தொகை பெருகிவருகிறது. 2100-ஆம் ஆண்டில் அங்கு மட்டும் 100 கோடியாக மக்கள் தொகை உயரும்.

ஆப்பிரிக்காவின் சகாரா பகுதி நாடுகளில் தான் மக்கள் தொகை பெருக்கம் மிக அதிகம் உள்ளது. இங்கு மட்டும் மொத்த ம்ககள் தொகையில் 80 சதவீதம் அதாவது 350 கோடி முதல் 510 கோடி வரை மக்கள் தொகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தவிர உலகின் மற்ற பகுதிகளில் குறைந்த அளவில்தான் உயரும். ஆசியா கண்டத்தில் தற்போது மக்கள் தொகை 440 கோடியாக உளஅளது. இது 2050-ஆம் ஆண்டில் 500 கோடியாகும். பின்னர் படிப்படியாக குறையும் என கணக்கிடப்பட்டுள்ளது.

வட அமெரி்ககா, ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் தலா 100 கோடிக்கும் கீழே மக்கள் தொகை இருக்கும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்