முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் வழக்குகளில் இருந்து பாக்., பிரதமர் நவாஷ் விடுதலை

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

ராவல்பிண்டி, செப்.21 - ஊழல் வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்பும் அவரது தம்பியும் விடுதலை செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் செரீப் பதவி வகிக்கிறார். இவரது தம்பி ஷாபாஷ் செரீப் பஞ்சாப் மாகாண முதல் மந்திரியாக இருக்கிறார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2000-ஆம் ஆண்டில் நவாஸ் செரீப், ஷாபாஷ் செரீப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஊழல் செய்ததாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த வழ்ககுகள் விசாரிக்கப்படாத நிலையில் கிடப்பில் போடப்பட்டிருந்தன. இந்த நிலையில் அதை மீண்டும் விசாரிக்க வலியுறுத்தி தேசிய லஞ்ச ஒழிப்புத் துறை கோர்ட்டில் வழ்ககு தொடர்ந்தது.

அந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு கோர்ட்டு நீதிபதி அன்வர் அகமது விசாரித்தார். இறுதியில் இந்த வழ்ககில் குற்றம் நிரூபிக்கப்படாததால் பிரதமர் நவாஸ் ஷெரீப். அவரது தம்பி ஷாபாஷ் செரீப் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்பளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்