முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போப்புக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்

சனிக்கிழமை, 20 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாடிகன், செப்.21 - முஸ்லிம் நாடான அல்பேனியாவுக்குச் செல்லும் போப் பிரான்சிசுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகளால் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்படும் நிலையிலும், திட்டமிட்டபடி அவர் பயணம் மேற்கொள்வான் என வாடிகன் அறிவித்துள்ளது.

போப் பிரான்சிஸ் இன்று அ்பேனியா செல்லவுள்ளார். அங்கு ஐஎஸ் பயங்கரவாதிகளால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என வாடிகனுக்கான ஊராக் தூதர் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும், அல்ஜீரியாவிலிருந்து சென்ற ஐஎஸ் சிடம் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் பலர், அண்மையில் நாடு திரும்பியுள்ளதாக இத்தாலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. போப் பிரான்சிஸ் பயங்கரவாதத்துக்கு எதிராகப் பேசி வருவதால், ஐஎஸ் சின் தாக்குதலுக்கு அவர் இலக்காகக்கூடும் என பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனினும், வாடிகன் செய்தித் தொடர்பாளர் பெட்ரிக்கோ லம்பார்டி கூறுகையில், போப் பிரான்சிசின் அல்பேனியா சுற்றுப்பயணம் திட்டமிட்டப்படி நிகழும். அவரது நிகழ்ச்சிகளிலோ, பயணத் திட்டத்திலோ எந்த மாற்றமும் இல்லை என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்