முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எகிப்துக்கு 10 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வழங்க முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், செப்.22 - தீவிரவாதத்தை ஒடுக்க எகிப்துக்கு 10 அதிநவீன ஹெலிகாப்டர்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

எகிப்தில் சிறுபான்மையினராக இருக்கும் கிறிஸ்தவர்களை குறிவைத்து தீவிரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் அரசு படைகள் மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். இந்நிலையில், தீவிரவாதிகளுக்கு எதிராக எகிப்து அரசுக்கு உதவ அமெரிக்கா உதவ முன்வந்துள்ளது. இதனை தொடர்ந்து தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க அதிநவீன அப்பாச்சி ரக ஹெகாப்டர்கள் வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்கா அறிவித்திருந்தது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை நேற்று முன்தினம் வாஷிங்டனில் நடைபெற்றது. அமெரிக்க பாதுகாப்பு செயலர் சுக் ஹேகலுடன் எகிப்து பாதுகாப்பு அமைச்சர் கலோனல் ஜெனரல் செட்கிசோபி பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் எகிப்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் அரசு உதவுவதற்கான 10 அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து பெரும் பங்கு வகித்தது. இதை கருத்தில் கொண்டு எகிப்துக்கு உடனடியாக ஹெலிகாப்டர்களை வழங்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்