முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜான் கீ நியூசிலாந்து பிரதமராக மீண்டும் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      உலகம்
Image Unavailable

 

வெல்லிங்டன், செப்.22 - நியூசிலாந்த்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தேசிய கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, இப்போதைய பிரதமர் ஜான் கீ தனது பதவியைத் தக்க வைத்துள்ளார். அவர் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியை வகிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஜான் கீ, தலைமையிலான அரசி சிறப்பாக கையாண்டதற்கு பரிசாகமக்கள் இந்த வெற்றியை அவருக்கு அளித்துள்ளனர். இந்த வெற்றி குறித்து ஆக்லாந்தில் செய்தியாளர்களிடம் ஜான் கீ கூறுகையில், இது எங்கள் அரசின் மீது நம்பிக்கை வைத்திருந்தவர்களின் வெற்றி. நியூசிலாந்துக்கு பிரகாசமான எதிர்காலத்தை உண்டாக்க நினைத்து தேசிய கட்சிக்கு வாக்களித்தவர்களின் வெற்றி. சைமன் வில்லியம் பில் இங்கிலீஷ், சிறந்த துணை பிரதமராக செயல்பட்டார் என்றார்.

நியூசிலாந்தில் மொத்தமுள்ள 121 நாடாளுமன்றத் தொகுதிகளில் 61 தொகுதிகளில் தேசிய கட்சி வெற்றி பெற்றது. முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 32 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. கடந்த தேர்தலில் 59 தொகுதிகளில் தேசியக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கன்லிஃப் கூறுகைில், எங்களின் கட்சிக்கு கிடைக்க வேண்டிய வாக்குகள் அனைத்தும் தேசிய கட்சி தலைமையிலான அரசுக்கு திரும்பியுள்ளன. இதற்கான காரணம் குறித்து வரும் நாட்களில் பரிசீலிக்க உள்ளோம். பல ஆண்டுகளாக நீடித்து வரும் பிரச்னைகள் அரசுக்கு எதிராக எழுப்பப்பட்டன. எனினும், பொருளாதாரத்தில் 4 சதவீத வளர்ச்சியை அரசு மீட்டெடுத்துள்ளது. தேசிய கட்சி வெற்றி பெறவாய்ப்பாக அமைந்துவிட்டது, என்றார்.

கடந்த ஆட்சியில், வேலைவாய்ப்பின்மை 5.6 சதவீதம் குறைக்கப்பட்டது, பொருளாதாரத்தில் 4 சதவீத வளர்ச்சியை அதிகரித்தது ஆகியவை, மீண்டும் தேசிய கட்சி வெற்றி பெற முக்கிய காரணங்களாக அமைந்தன என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்