முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ஜி வழக்கு: மொரானி வெளிநாடு செல்ல அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 21 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, செப்.22 - 2-ஜி வழ்ககில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹிந்தி திரைப்படத் தயாரிப்பாளர் கரீம் மொரானி படப்பிடிப்பில் கலந்து கொள்ள வெளிநாடு செல்வதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக, மத்திய முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், மகள் கனிமொழி, ஸ்வான் டெலிகாம் நிறுவன உறிமையாளர் ஷாஹித் உஸ்மான் பல்லா, கரீம் மொரானி உள்பட 19 பேர் மீது சிபிஐ தரப்பில் குற்றம்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இதில் ஷாஹித் உஸ்மான் பல்வா, லண்டனில் பயிலும் தனது மகனைப் பார்த்துவருவதற்காக இங்கிலாந்து செல்வதற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், தனது தயாரிப்பில் உருவாகும், பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் ஷாரூக் கான் நடிக்கும் ஹேப்பி நியூயர் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காகவும், படத் தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் இங்கிலாந்து, துபை, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்வதற்கு அனுமதி கேட்டு கரீம் மொரானி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.

அப்போது, சிபிஐ தரப்பில் இந்த மனு மீது ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. கரீம்் மொரானி வெளிநாடு செல்ல அனுமதித்தால், அதைத் தவறாகப் பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பிக்க முயற்சிப்பார் என்று சிபிஐ வழக்குறைஞர் வாதிட்டார். இருப்பினும், சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சைனி, மொரானியை வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து , இன்று முதல் அக்டோபர் 8-ஆம் தேதி வரை மொரானி வெளிநாட்டில் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்