முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி: வெண்கலம் வென்றார் அபினவ் பிந்த்ரா

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியோன், செப்.24 - ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று தனது தொழில்முறை துப்பாக்கி சுடுதல் போட்டியை நிறைவு செய்த அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்று தந்துள்ளார்.

தென்கொரியாவின் இன்சியானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியின் 4-வது நாளில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 6- ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்து இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.

இந்த போட்டியில் சீன அணி தங்க பதக்கத்தையும் தென் கொரிய அணி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றன. இதன் மூலம் பதக்கப் பட்டியலில், இந்தியா ஒரு தங்கம் 6 வெண்கலம் பதக்கங்களுடன் 13வது இடத்தில் உள்ளது.

முன்னதாக அவர் வெளியிட்ட டுவிட்டர் தளத்தில் இன்றைய போட்டியே தனது கடைசி நாள் போட்டி என்று அபினவ் பிந்த்ரா தெரிவித்திருந்தார். துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், இந்தியாவின் முதன்மை நட்சத்திரமாகத் திகழும் அபினவ் பிந்த்ராவின் இந்த திடீர் அறிவிப்பு, விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பொழுதுபோக்குக்காக மட்டும் துப்பாக்கி சுடுதல் போட்டியில் ஈடுபட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு ஆசியப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவர் நாளை இன்சியானில் கையான்கிடோ ஷூட்டிங் ரேஞ்சில் கடைசி முறையாக தொழில்பூர்வ துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் பங்கேற்கிறார். 2008-ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தவர் அபினவ் பிந்த்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்