முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரெய்னா - மேக்கல்லத்துக்கு கேப்டன் டோணி பாராட்டு

செவ்வாய்க்கிழமை, 23 செப்டம்பர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், செப்.24 - பெங்களூரில் நடந்த சாம்பியன்ஸ் லீக்கின் 8வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-டால்பின்ஸ் அணிகள் மோதின.

‘டாஸ்' வென்ற டால்பின்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்ய வந்த சென்னை சூப்பர் கீங்ஸ் அணியின் துவக்க வீரரான வெய்ன் சுமித் 7 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், 2வது விக்கெட் இணையான பிரன்டன் மெக்கல்லம், சுரேஷ் ரெய்னா ஆகியோர் அதிரடி காட்டினார்கள். சுரேஷ் ரெய்னா தொடக்கம் முதலே விளாசி தள்ளினார். அவரை கட்டுப்படுத்த முடியாமல் டால்பின்ஸ் வீரர்கள் தடுமாறினார்கள். 4 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் 100 ரன்னை தாண்டியது. பிரன்டன் மெக்கல்லம் 29 பந்துகளில் 5 பவுண்டரி 3 சிக்சருடன் 49 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்.

சுரேஷ் ரெய்னா சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரைலிங் பந்து வீச்சில் அவுட் ஆனார். சுரேஷ்ரெய்னா 43 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சருடன் 90 ரன்கள் குவித்தார். அடுத்து வந்த கேப்டன் டோணி முதல் பந்திலேயே டக்-அவுட் ஆகி ரசிகர்களை ஏமாற்றினார். டுபிளிஸ்சிஸ் 30 ரன்னும், வெய்ன் பிராவோ 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் குவித்தது. ரவீந்திர ஜடேஜா 40 ரன்னுடனும் (15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) அஸ்வின் 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

பின்னர் 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் ஆடிய டால்பின்ஸ் அணியும் ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. 2.3 ஓவர்களில் 50 ரன்னை எட்டிய அந்த அணி 8.5 ஓவர்களில் 100 ரன்னை கடந்தது.

அதன் பின்னர் விக்கெட்டுகள் வீழ்ந்ததால் அந்த அணியின் அதிரடியில் தொய்வு ஏற்பட்டது. 20 ஓவர்களில் டால்பின்ஸ் அணி 188 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். டால்பின்ஸ் அணி தொடர்ந்து சந்தித்த 2வது தோல்வி இதுவாகும். ஆட்டநாயகனாக சென்னை சூப்பர் கீங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட்டார்.

வெற்றி குறித்து சென்னை கேப்டன் டோணி கூறுகையில்:

எங்களது பேட்டிங் மிகவும் சிறப்பாக இருந்தது. ரெய்னா, மேக்குல்லம் ஆட்டம் அதிரடியாக இருந்தது. இருவரும் சிற்பபான தொடக்கத்தை ஏற்படுத்தினார்கள். இதுவே முக்கியமானது. பின்னர் வந்த வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொண்டனர். நமது பந்து வீச்சாளர்கள் சுற்று திணறுகிறார்கள். கூடுதலாக 15 முதல் 20 ரன்களை கொடுத்துவிட்டனர். பந்து வீச்சில் இன்னும் முன்னேற்றம் தேவை. இந்த போட்டியில் கோப்பையை வெல்ல வெேண்டுமானால் பவுலர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி சிறப்பாக வீசவேண்டும். ஒவ்வொரு முறையும் பேட்ஸ்மேன்களால் 240 ரன்கள் குவிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago