முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிழக்கு லடாகிலிருந்து சீன - இந்திய படைகள் வாபஸ்

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, அக் 2:

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிழக்கு லடாக் பகுதியில் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படைகளை இந்தியாவும், சீனாவும் திரும்ப பெற்றன. இதையடுத்து இரு நாட்டு எல்லை விவகாரங்கள் குறித்து இரு நாடுகளும் இம்மாதம் 16,17ம் தேதிகளில் சந்தித்து பேசவுள்ளன. இது குறித்து வெளியுறவு துறை அமைச்சகம் வெளியி்ட்டுள்ள அறிக்கையில், கிழக்கு லடாக்கின் சுமர், தெம்சோக் ஆகிய பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு நாட்டு படைகளை திரும்ப பெறுவது குறித்து கடந்த 26 , 27ம் தேதிகளில் டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதை தொடர்ந்து ஸ்பாங்குர் பகுதியில் இந்திய சீன எல்லை கமாண்டர்கள் சந்தித்து பேசினர். அப்போது சுமர், தெம்சோக் ஆகிய பகுதிகளில் இருந்து இரு நாட்டு படைகளும் திரும்ப பெற்றது உறுதி செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்