முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாங்காங்கில் மக்கள் போராட்டம் சட்டவிரோதமானது: சீனா

புதன்கிழமை, 1 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

ஹாங்காங், அக் 2 - ஹாங்காங்கில் மக்கள் நடத்தி வரும் போராட்டம் சட்ட விரோதமானது என்று சீன அரசு அறிவித்துள்ளது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் முழுமை யாக ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கடந்த சில நாள்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் ஈடுபட்டுள்ளவர்கள் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் என்பதால் போராட் டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. ஆயிரக்கணக்கானோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டுள்ளதால் ஹாங்காங் நகரமே ஸ்தம்பித்து வருகிறது.

இந்தப் போராட்டத்தை ஒடுக்க போலீஸார் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கி சூடு நடத்தினர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். எனினும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. 2017-ம் ஆண்டு ஹாங்காங்கின் தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறும் என்று சீன அரசு அறிவித்துள்ளது. எனினும், சீன அரசு அமைக்கும் குழுவே வேட் பாளர்களை தேர்ந்தெடுக்கும் என்று கூறியுள்ளது. இதுவே பிரச் சினைக்கு அடிப்படைக் காரணம். வேட்பாளர்களை சீன அரசு தேர்ந் தெடுப்பதும் ஒன்றுதான், தேர்தல் நடத்தாமல் அவர்களை நியமிப்பதும் ஒன்றுதான் என்று ஹாங்காங் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தங்கள் ஆட்சியாளரை முழுமையாக ஜன நாயக முறைப்படி தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஹாங்காங்கில் நடந்து வரும் ஐனநாயக போராட்டம் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங் இதுவரை கருத்து எதையும் தெரிவிக்கவில்லை. போராட்டம் தீவிரமடையும் பட்சத்தில் சீன ராணுவம் ஹாங்காங்கில் புகுந்து நடவடிக்கை எடுக்கும் என்று தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago