முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய கபடி: 2 தங்கப் பதக்கம் வென்று இந்தியா சாதனை

வெள்ளிக்கிழமை, 3 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்ச்சியான், அக் 4 - தென்கொரியாவில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியின் கபடி பிரிவில் இந்திய ஆண்கள், பெண்கள் அணிகள் நேற்று அபார வெற்றி பெற்று 2 தங்கப் பதக்கங்களை தட்டிச் சென்றன. ஆசிய போட்டியில் இதுவரை 57 பதக்கங்களை இந்தியா குவித்து 6ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவின் இன்ச்சியான் நகரில் நடந்து வருகின்றன. ஆசிய விளையாட்டில் கபடி சேர்க்கப்பட்டதில் இருந்து இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆசிய விளையாட்டில் கபடி போட்டி ஆண்கள் பிரிவு 1990ம் ஆண்டிலும், பெண்கள் பிரிவு 2010ம் ஆண்டிலும் சேர்க்கப்பட்டன. இதன் பின்னர் நடந்த ஆசிய போட்டிகள் அனைத்திலும் கபடியில் இந்தியாவே தங்க பதக்கத்தை வென்றுள்ளது.

இன்ச்சியான் ஆசிய விளையாட்டில் பெண்கள் பிரிவு கபடி இறுதி போட்டி நேற்று காலை நடந்தது. நடப்பு சாம்பியனான இந்தியா, ஈரான் அணியை எதிர்கொண்டது. இதில் ஈரான் வீராங்கனைகள் கடுமையான போட்டியை வெளிப்படுத்தினர். இதனால் இரு அணிகளுக்கும் மாளி மாறி புள்ளிகள் கிடைத்தன. முதல் பாதியில் இந்திய வீராங்கனைகள் 1 5-11 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலை பெற்றிருந்தனர். ரசிகர்களின் ஆதரவுடன் ஆட்டத்தில் கலக்கிய இந்திய வீராங்கனைகள் இறுதியில் 31-21 என்ற புள்ளிக்கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.

ஆண்கள் பிரிவில் இந்தியா - ஈராக் மோதிய போட்டி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. முதல் பாதியில் ஈரான் வீரர்கள் அதிரடியாக விளையாடி புள்ளிகளை குவிக்க இந்திய வீரர்கள் தடுமாறினர். முதல் பாதியில் ஈரான் அணி 21-13 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் வீறு கொண்டு விளையாடிய இந்திய வீரர்கள், ஈரான் வீரர்களை தொடர்ந்து மடக்கி பிடித்து புள்ளிகளை குவிக்க தொடங்கினர். இதன் மூலம் இரண்டாவது பாதியின் 1 6வது நிமிடத்தில் இந்தியா முன்னிலை பெற்றது. இந்தியா 25-24 என முன்னிலை பெற்றது. கடைசி நொடியில் பாடி வந்த ஈரான் வீரரை இந்திய வீரர்கள் மடக்கி பிடித்தனர். இதையடுத்து 27-25 என்ற புள்ளி கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. ஆசிய போட்டியில் இதுவரை 11 தங்கம், 9 வெள்ளி, 37 வெண்கலம் என மொத்தம் 57 பதக்கங்களை இந்தியா குவித்து பதக்கப்பட்டியலில் 6ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்