முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டி நிறைவு: இந்தியாவுக்கு 8-வது இடம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

இன்சியான்: தென்கொரியாவில் நடந்த 17 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவடைந்தது. இப்போட்டியில் 57 பதக்கங்களுடன் இந்தியா 8வது இடத்தைப் பிடித்துள்ளது.

தென்கொரியாவிலுள்ள இன்சியானில் கடந்த மாதம் 19ந் தேதி ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கியது. இதில் 36 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மொத்தம் 45 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரம் வீரர்கள், வீராங்கனைகள் இந்த விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். இந்த 17வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று மாலை நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. அடுத்த ஆசியப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் 2018-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனா 17 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், 151 தங்கம், 108 வெள்ளி, 83 வெண்கலம் என 343 பகதக்கங்களைப் பெற்று சீனா முதலிடம் வகிக்கிறது. 79 தங்கம், 71 வெள்ளி, 84 வெண்கலம் என 234 பதக்கங்களுடன் தென்கொரியா 2வது இடத்தைப் பிடித்தது.

47 தங்கம், 76 வெள்ளி 77 வெண்கலம் என 200 பதக்கங்களுடன் ஜப்பான் 3வது இடத்திலும் உள்ளன. கடந்த ஆசியப் போட்டியிலும் இந்த நாடுகளே முதல் 3 இடங்களை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஆசியாவின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா 11 தங்கம், 10 வெள்ளி, 36 வெண்கலம் என 57 பதக்கங்களுடன் 8 வது இடம் பிடித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்