முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் ஆப்கனுக்கு திடீர் பயணம்

சனிக்கிழமை, 4 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

காபூல், அக் 5 :

பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் ஆப்கானிஸ்தானுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

சைப்ரஸ் நாட்டில் உள்ள பிரிட்டிஷ் போர் விமான தளத்தை பார்வையிட்ட பின்னர் அவர் திடீரென ஆப்கானிஸ்தான் பயணம் மேற்கொண்டார். கேமரூனின் ஆப்கன் விஜயம் குறித்த எந்த முன்னறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ஈராக்கில் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான வான்வழி தாக்குதலுக்கு சைப்ரஸில் அமைந்துள்ள போர் விமான தளம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த விமான தளத்தில் வீரர்களை கேமரூன் சந்தித்து பேசிய பின்னர் ஆப்கன் தலைநகர் காபூல் வந்தார்.

ஆப்கனின் புதிய அதிபராக அஷ்ரப் கனியும், பிரதமர் பதவிக்கு இணையான தலைமை செயல் அதிகாரியாக அப்துல்லா அப்துல்லாபும்  பதவியேற்ற பின்னர் அந்நாட்டுக்கு பயணம் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு தலைவர் பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன். தலைநகர் காபூல் வந்து சேர்ந்த கேமரூன், அதிபர் அஷ்ரப் கனியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அப்துல்லாவை சந்தித்து பேசினார். கனி, அப்துல்லா தரப்பினர் இணைந்து ஆப்கானிஸ்தானில் தேசிய ஒற்றுமை அரசு ஏற்படுத்தியதற்கு பாராட்டு தெரிவித்த கேமரூன், புதிய அரசுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிப்பதாக கூறினார். பின்னர் மூவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, ஆப்கானிஸ்தானையும் உலகையும் பாதுகாப்பு  மிகுந்த இடமாக மாற்றிய நேட்டோ படையினருக்கு கனி , அப்துல்லா ஆகியோர் நன்றி தெரிவித்தனர். ஆப்கானிஸ்தானில் தலிபானுக்கு எதிராக போரிட்டுவந்த நேட்டோ சர்வதேச பாதுகாப்பு படையில் பிரிட்டிஷ் ராணுவத்தினர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் நாடு திரும்பி விட்டனர். இப்போது 3,900 பிரிட்டிஷ் வீரர்கள் மட்டுமே ஆப்கானிஸ்தானில் உள்ளனர். தற்போதுள்ள நேட்டோ படையின் செயல்பாடுகள் இந்த ஆண்டு இறுதி வரை மட்டுமே தொடரும். அடுத்த ஆண்டு ஜனவரி  முதல் தேதியில் இருந்து அமெரிக்கா தலைமையில் 12,800 வீரர்கள் கொண்ட பாதுகாப்பு உதவி படை ஆப்கனில் ஈடுபடுத்தப்படும். இதில் அமெரிக்க வீரர்கள் 9,800 பேர் இடம்பெறுவர். ஆப்கன் பாதுகாப்பு படையில் 3.5 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்கள் பிரதானமாக தலிபானுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்த ஆண்டு மட்டுமே 7 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்