முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரன் குவிப்பது பற்றி கோலியிடம் கற்றுக் கொண்டேன்

திங்கட்கிழமை, 6 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

பெங்களூர், அக்.07 - ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக ஆடி பெரிய அளவில் ரன் குவிப்பது பற்றியும், சதமடிப்பது பற்றியும் விராட் கோலியிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்தார்.

பெங்களூரில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் 52 பந்துகளில் 80 ரன்கள் குவிக்க அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னா 62 பந்துகளில் 8 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 109 ரன்கள் குவிக்க, 18.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்து வெற்றி கண்டது.

தொடர் நாயகன் விருது வென்ற ரெய்னா பேசுகையில், "சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய 7 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை கற்றிருக்கிறேன். ஆரம்பகாலத்தில் மேத்யூ ஹேடன், மைக் ஹசி, பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் ஆகியோரிடம் இருந்து கற்றுக்கொண்ட விஷயங்கள் என்னை முதிர்ச்சியான கிரிக்கெட் வீரராக மாற்றியது.

இந்திய அணிக்காக விளையாடுகிறபோது விராட் கோலி அசத்தலாக ஆடி சதமடித்து அணியை தூக்கி நிறுத்துவதை பார்த்து அவரிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். தோனியுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடியதையும் மறக்க முடியாது. இதேபோல் யுவராஜ் சிங்கின் பெயரையும் குறிப்பிட விரும்புகிறேன்" என்றார்.

கொல்கத்தாவுக்கு எதிரான வெற்றி குறித்துப் பேசிய ரெய்னா, "இதுபோன்ற இறுதிப் போட்டிகளில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பது மிக முக்கியமானது. கொல்கத்தா அணி 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டதாக நினைக்கிறேன். கடைசி வரை களத்தில் நின்று அணிக்கு வெற்றி தேடித்தர வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

குல்தீப் யாதவ், யூசுப் பதான், பியூஷ் சாவ்லா ஆகியோரின் பந்துவீச்சை ஏற்கெனவே எதிர் கொண்டிருந்ததால் இந்த ஆட்டத் தி்ல் அவர்களுடைய பந்து வீச்சை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தேன்" என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்