முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - வெ.இண்டீஸ் இடையே இன்று ஒருநாள் போட்டி

செவ்வாய்க்கிழமை, 7 அக்டோபர் 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொச்சி, அக்.08 - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஒருநாள் போட்டி, 3 டெஸ்ட், ஒரே ஒரு 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது.

ஒருநாள் போட்டி இன்று தொடங்கி 20-ஆம் தேதி வரை நடக்கிறது. கொச்சியில் இன்று நடைபெறும் முதல் ஒருநாள் போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்குகிறது. டோனி தலைமையிலான இந்திய அணியில் ஷிகார் தவான், வீராட் கோலி, முரளிவிஜய், அம்பதிராயுடு, ரஹானே, சுரேஷ் ரெய்னா, ஆகிய பேடஸ்மேன்களும், மோகித் சர்மா, புவனேஸ்வரகுமார், முகமது சமி, ஜடேஜா, அமித் மிஸ்ரா, உமேஷ்யாதவ் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர். இடதுகை சுழற்பந்து வீச்சாளர் குல்தீர்யாதவ் அறிமுக வீரராக உள்ளார். தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித்சர்மா காயத்தால் விலகி உள்ளதால் ஹிகார் தவானுடன் தமிழக வீரர் முரளி விஜய் தொடக்க வீரராக களம் இறங்குவார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சொதப்பிய நட்சத்திர வீரர் வீராட் கோலி திறமையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதேபோல் ஷிகார் தவானும் தனது அதிரடி ஆட்டத்தை வெளிகாட்ட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார். உள்ளூரில் இந்திய அணி சிறப்பாக விளையாடும் என்பதால் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.

வெயன் பிராவோ தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிம்மன்ஸ், வெயன் சுமித், டாரன் பிராவோ, சாமுவேல்ஸ், போல்லார்ட், டாரன் சமி, ராம்தின் போன்ற பேட்ஸ்மேன்களும், ரவி ராம்பால், ஹோல்டர், ரசூல், ரோச் ஆகிய பந்து வீச்சாளர்களும் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் உள்ள வீரர்கள் பலர் ஐபிஎல் போட்டியில் விளையாடி உள்ளதால் அந்த அனுபவம் கைக்கொடுக்கும். இதனால் இந்தியாவை வீழ்த்த முடியும் என்று நம்பிக்கையுன் உள்ளனர்.

இன்று போட்டி நடைபெறும் கொச்சியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதனால் போட்டி மழையால் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்