முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிய போட்டியில் பதக்கம்: வீரர்கள் - வீராங்கனைகளுக்கு பரிசு

வியாழக்கிழமை, 9 அக்டோபர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, அக். 10. ஆசிய ஹாக்கி போட்டியில் தங்கம் வென்ற ஸ்ரீஜேஷ்க்கு பரட்டு ரவீந்திரனுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியா நாட்டில் இன்ஷியா நகரில் நடைப்பெற்றது நினைவிருக்கலாம். இந்த போட்டியின் போது இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்கம் பதக்கம் வென்றது. அவ்வாறு தங்க பதக்கம் வென்ற ஹாக்கி அணியின் துணை கேப்டனும், கோல் கீப்பரான தமிழக வீரர் ஸ்ரீஜேஷ் பரட்டு ரவீந்திரனுக்கு முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தங்க பதக்கம் வென்றுள்ளதை அறிந்து மகிழ்கிறேன். அந்த அணியில் நீங்களும் ஒரு முக்கிய நபர் என்பதால், தமிழக மக்களின் சார்பாக எனது வாழ்த்துகள்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்க பதக்கம் வெல்பவர்களுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்று எங்கம் அம்மா ஏற்கனவே அறிவித்தார் . அது உங்களுக்கு தெரியும். அதன்படி ரூ.50 லட்சத்தை பெற தகுதியுள்ளவர் நீங்கள். அம்மாவின் அறிவிப்புபடி அந்த தொகை வழங்கப்படும். தமிழக அரசின் சார்பாக உங்களுக்கு எங்களின் பாராட்டுகள். எதிர்காலத்திலும் இந்த சாதனை தொடரட்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் ஊக்கத்தொகை பெற்ற வீரர்களும் அவர்களுக்கான பரிசுத் தொகையும் வருமாறு:

1. வீராங்கனை வர்ஷ கௌதம் - 20 லட்சம்

2. வீராங்கனை ஐஸ்வர்யா நெடுஞ்செழியன் - 20 லட்சம்

3. வீரர் ராஜீவ் ஆரோக்யா - 20 லட்சம்

4. வீரர் குஷ்குமார் - 50 லட்சம்

5. ஹரீந்தர் பால்சிங் - 50 லட்சம்

6. செளரவ் கோஷல் - 50 லட்சம்

7. அபரஷிதா பாலமுருகன் - 30 லட்சம்

8. அனகா அலங்கமோனி - 30 லட்சம்

9. ஜோஷ்னா சின்னப்பா - 30 லட்சம்

10. தீபிகா பல்லிகல் - 30 லட்சம்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago