முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி வழக்கு: சிபிஐ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக் 11 - அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளாக மத்திய அமலாக்க துறை துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங் உள்ளிட்ட சிலரை சேர்க்க சிபிஐக்கு அனுமதி அளிக்க கூடாது என்று டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

இந்த வழக்கு சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களில் ஒருவரான கனிமொழி சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்தார். அதில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு அதன் மீது குற்றம் சாட்டப்பட்டோர் வாதமும் சிபிஐ தரப்பு வாதமும் முடிந்துள்ளன. 2011ல் தொடரப்பட்ட இந்த வழக்கில் திடீரென்று சிலரது பெயர்களை குறிப்பிட்டு அவர்களை தங்களது தரப்பு சாட்சிகளாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று சிபிஐ கோருவது உள்நோக்கத்துடன் கூடிய செயலாக கருதப்படுகிறது. சாட்சியங்களிடம் விசாரணையும் குறுக்கு விசாரணையும் முடிந்து விட்ட நிலையில் சிபிஐ தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கனிமொழி கோரியுள்ளார். கனிமொழியை போலவே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கலைஞர் டி.வி.யின் முன்னாள் இயக்குனர் சரத்குமாரும் சிபிஐ மனுவுக்கு ஆட்சேபம் தெரிவித்து மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் இதர குற்றம் சாட்டப்பட்டோர் சிபிஐயின் மனுவுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளிக்க விரும்பவில்லை. அதன் மீது விசாரணை நடைபெறும் போது வழக்கறிஞர் மூலமாக வாதத்தை முன் வைக்கிறோம் என்று கூறினர். இதை கேட்ட நீதிபித ஷைனி, சிபிஐ மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறேன். அதற்கு முன்பாக சிபிஐ மனுவுக்கு குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆட்சேபம் தெரிவிக்க விரும்பினாஸல் வரும் 1 5ம் தேதிக்கு முன்பாக எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறை விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டோர் சிபிஐ தரப்பு வாதங்கள் முடிவடைந்து வழக்கின் இறுதி விசாரணை நவம்பர் 10ம் தேதி தொடங்கும் என்று சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட்டில் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த மாதம் சிபிஐ தாக்கல் செய்த மனுவில் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க துறை கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கலைஞர் டிவிக்கும், சில தனியார் நிறுவனங்களுக்கும் இடையே நடைபெற்ற நிதி பரிவர்த்தனை தொடர்பாக சில விவரங்கள் தெரியவந்துள்ளன. எனவே மத்திய அமலாக்க துறை துணை இயக்குனர் ராஜேஷ்வர்சிங், உதவி இயக்குர் சத்யேந்திரசிங், மத்திய தகவல் ஒலிபரப்பு துறை உதவி செயலர் நவில்கபூர், வங்கி அதிகாரி மணி ஆகியோரை சிபிஐ தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரியது. மேலும் நீதிமன்றத்தில் ஏற்கனவே சிபிஐ தரப்பு சாட்சிகளாக ஆஜராகி சாட்சியம் அளித்த கலைஞர் டிவி பொது மேலாளர் ஜி. ராஜேந்திரனை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று சிபிஐ அனுமதி கேட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்