தமிழ் எம்.பி.க்கு துணை அமைச்சர் பதவி அளித்த ராஜபட்ச!

வெள்ளிக்கிழமை, 10 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, அக்.11 - இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச, மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழருமான வி.எஸ்.ராதாகிருஷ்ணனை துணை அமைச்சராக நியமித்தார்.
ராஜபட்ச, 3-வது முறையாக அதிபர் தேர்தலை சந்திக்க உள்ள நிலையில் தமிழர்களின் ஆதரவைப் பெறுவதற்காக தமிழ் எம்.பி.க்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. யுபிஎப்ஏ உறுப்பினரான ராதாகிருஷ்ணன், தாவரவியல் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள் துறை துணை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் என அதிபர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி சார்பில் நுவராலியா மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: