எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் அத்துமீறல்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக்.12 - எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியிலும், சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் 8 பேர் பலியாகினர், 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் ஒரு நாள் மட்டும் எல்லையில் அமைதி நிலவியது. எல்லையில் இந்திய வீரர்கள் கொடுத்த பதிலடியை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவம் பின்வாங்கிவிட்டதாக பிரதமர் மோடி கூறியிருந்தார். இந்நிலையில், எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: