ஜப்பானில் நிலநடுக்கம்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, அக்.12 - ஜப்பானில் நேற்று சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவானது.

அங்குள்ள முக்கிய தீவான ஹொன்சுவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தால் வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. ஹச்சிநோஹே பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கத்தை விட அதிக உயரத்துக்கு அலைகள் ஏற்பட்டாலும் சுனாமி எச்சரிக்கை விடவில்லை. நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்: