முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருது வழங்கும் விழா: ஷெரீப் - மோடி பங்கேற்க விருப்பம்

சனிக்கிழமை, 11 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஆஸ்லோ, அக்.12 - நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறவுள்ள நோபல் விருது வழங்கும் விழாவில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க வேண்டும் என தான் விரும்புவதாக நோபல் அமைதி விருது பெற்றுள்ள மலாலா யூசுப்சாய் தெரிவித்துள்ளார்.

இந்திய சமூக ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா யூசுப்சாய் இருவரும் 2014-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை பகிர்கின்றனர். குழந்தைகள் நல உரிமைகளுக்காக பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை நடத்தியது, குழந்தைகளின் கல்விக்கான உரிமைகளுக்காக போராடியது உள்ளிட்ட இவர்களது தன்னலமற்ற பங்களிப்புக்காக அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதாக நார்வே நோபல் கமிட்டி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இளம் வயதில் நோபல் அமைதி விருது பெறும் முதல் நபர் என்ற பெருமையை பெற்றுள்ள மலாலா (17), விருது நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பங்கேற்க வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார். விருதுக்கான பரிசுத் தொகை 1.11 மில்லியன் டாலரை மலாலாவும், பச்பன் பச்சாவோ அந்தோலன் நிறுவனர் கைலாஷ் சத்யார்த்தியும் பகிர்ந்து கொள்கின்றனர். இந்த வருடம் நோபல் அமைதி விருதுக்கான பரிந்துரைப் பட்டியலில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 278 பேர் இருந்ததாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்