முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சரிதா நாயருக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      ஊழல்
Image Unavailable

 

திருவனந்தபுரம், அக் 13 - கேரள மாநிலம் ஆழப்புழை செங்கனூரை சேர்ந்தவர் சரிதாநாயர். அவரது கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் நாயர். இவர்கள் கோவை வடவள்ளியை தலைமையிடமாக கொண்டு சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்களிடம் ரவி என்பவர் மேலாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் வடவள்ளியை சேர்ந்த தியாகராஜன், ஊட்டியை சேர்ந்த அபுபாபாஜி, அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்ஸ்னா கிளாசன்ட் ஆகியோரிடம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூ. 32. 57 லட்சம் மோசடி செய்ததாக புகார் கூறப்பட்டது. அதன் பேரில் சரிதாநாயர், அவரது கணவர் மற்றும் ரவி ஆகியோர் மீ து கடந்த 2009ம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஜூடிசியல் மாஜி்ஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. சரிதா நாயர் உட்பட 3 பேரும் மாஜி்ஸ்திரேட் கார்த்திகேயன் முன்னிலையில் ஆஜரானார்கள். அப்போது அவர்களுக்கு குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. அதன் பின்னர் வழக்கு விசாரணையை வருகிற 17ம் தேதிக்கு மாஜி்ஸ்திரேட் ஒத்திவைத்தார். அன்று 3 பேரிடமும் குற்றச்சாட்டு குறித்து மாஜி்ஸ்திரேட் கேள்விகள் கேட்கவுள்ளதால் 3 பேரும் கண்டிப்பாக ஆஜராக வேண்டும்
என்று உத்தரவிடப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!