முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியது பாக்.,

ஞாயிற்றுக்கிழமை, 12 அக்டோபர் 2014      இந்தியா
Image Unavailable

 

ஜம்மு, அக்.13 - எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

இதில் 3 பேர் காயமடைந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் ஜம்மு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் தாக்குதல் குறித்து எல்லைப் பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது:

நேற்று முன் தினம் இரவு முழுவதும் சர்வதேச எல்லையில் 15 இந்திய நிலைகளை குறிவைத்தும், எல்லை கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதில் 3 பேர் காயமடைந்தனர். அர்னியா, ஆர்.எஸ்.புரா பகுதிகளில் சிறிய பீரங்கிக் குண்டுகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். இந்திய தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் தாக்குதல் காலை வரையிலும் நீடித்தது' என்றார்.

முன்னதாக சனிக்கிழமை பகலில் ஜம்மு-காஷ்மீரில் பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. பன்வாட், பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதிகளில் மீண்டும் பீரங்கி குண்டுகளை வீசியது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக பாகிஸ்தான் நடத்தி வரும் தாக்குதலில், 8 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். பாதுகாப்புப் படை வீரர்கள் 13 உள்பட 90-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்